செய்திகள்

உற்சாகமற்ற நிறைவு விழா: கோல்ட்கோஸ்ட் விளையாட்டு கூட்டமைப்பு தலைவர் வருத்தம்

DIN

உற்சாகமற்ற நிலையில் நிறைவு விழா நடைபெற்றதால் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பாக கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு தலைவர் பீட்டர் பீட்டி வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் கடந்த 4-ம் தேதி தொடங்கிய காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எனினும் விழா எந்த உற்சாகமும் இன்றி சோர்வுடன் நடைபெற்றதாகவும், விழா தொடங்கும் முன்னரே வீரர்கள் அரங்கில் நுழைந்து விட்டதாகவும், அணிவகுத்துச் சென்ற வீரர்களை ஒளிபரப்பவில்லை எனவும் சர்ச்சை எழுந்துள்ளது. 
போட்டி அமைப்புக் குழுத் தலைவர் பீட்டர் தனது கட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது: நிறைவு விழா நாங்கள் எதிர்பார்த்தவாறு அமையவில்லை, வீரர்களும் போட்டியின் அங்கம் என்பதால் அவர்களை அனுமதித்தோம். மேலும் விழாவில் அதிகம் பேர் பேசி உள்ளனர். இதற்காக நான் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT