செய்திகள்

யூத் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி தகுதிப் போட்டி: தென்கொரியாவை 10-0 என வீழ்த்தி இந்திய அணி அபாரம்

தினமணி

பாங்காக்கில் நடந்து வரும் யூத் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி தகுதிப் போட்டியில் தென்கொரியா அணியை 10-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஜூனியர் மகளிர் அணி நொறுக்கியது. ஆடவர் அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது.
 அர்ஜென்டினா பியனோஸ் அயர்ஸ் நகரில் யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் நடக்கின்றன. இதற்கான ஹாக்கி தகுதிப் போட்டிகள் பாங்காக்கில் நடந்து வருகின்றன. முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய ஜூனியர் ஆடவர், மகளிர் அணிகள் எளிதாக வெற்றி பெற்றன. அதே நேரத்தில் வியாழக்கிழமை நடந்த தென்கொரியாவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் லால்ரெம்சியாமி, சங்கீதா குமாரி, மும்தாஸ் கான், தீபிகா ஆகியோர் சிறப்பாக ஆடி கோலடித்தனர்.
 ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் விவேக் சாகர், ராகுல்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.
 ஆடவர் அணி அடுத்து ஹாங்காங், தென்கொரியாவையும், மகளிர் அணி தாய்லாந்தையும் எதிர்கொள்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT