ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் போட்டியின் 30 லீக் போட்டி புனேவில் இன்று நடைபெற்றது.
போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- தில்லி டேர் டேவில்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற தில்லி டேர் டேவில்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.
அணியில் அதிகபட்சமாக 7 சிக்ஸர் 4 பவுண்ரிகளுடன் ஷேன் வாட்சன் 78 ரன்களும், டுபிளெசிஸ் 33, அம்பத்தி ராயுடு 41, 5 சிக்ஸர், 2 பவுண்ரிகளுடன் மகேந்திர சிங் தோனி 51 ரன்களும் எடுத்துள்ளனர்.
212 ரன்களை இலக்காக கொண்டு தில்லி டேர் டேவில்ஸ் களத்தில் இறங்கியுள்ளது.