டென்னிஸ் தரவரிசை: 176-வது இடத்தில் பிரஜ்னேஷ்
சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 84 இடங்கள் முன்னேறி தற்போது 176-வது இடத்தில் உள்ளார்.
சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 84 இடங்கள் முன்னேறி தற்போது 176-வது இடத்தில் உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சீனாவில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் சர்க்யூட் போட்டியில் வென்றதின் மூலம் அவருக்கு 125 புள்ளிகள் கிடைந்ததன. இதன் மூலம் அவர் முதன்முறையாக தரவரிசைப் பட்டியலில் 200 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். முன்னணி வீரரான யுகி பாம்ப்ரி 85-வது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 12-வது இடத்திலும், உள்ளனர்.
இரட்டையர் பிரிவில் போபண்ணா 23, சரண் 43, பயஸ் 50-வது இடத்திலும் உள்ளனர்.
மகளிர் பிரிவில் அங்கிதா ரெய்னா 193-வது இடத்தில் உள்ளார்.