முகப்பு
செய்திகள்

முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு; அடில் ரஷித் சேர்ப்பு!

பர்மிங்ஹாம் எட்பாஸ்டனில் இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது..

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:23 PM
பகிர்:

பர்மிங்ஹாம் எட்பாஸ்டனில் இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட்அணி.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி அயர்லாந்து, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. டி 20 தொடரை வென்ற நிலையில், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்திடம் இழந்தது. இதன் தொடர்ச்சியாக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. 

இறுதியாக கடந்த 2007-ல் டிராவிட் தலைமையிலான அணி 1-0 என இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர்களுடைய மண்ணில் வென்றிருந்தது. தோனி தலைமையில் 2011, 2014-ல் முறையே 4-0, 3-1 என இந்தியா தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் இன்று தொடங்கவுள்ள டெஸ்டில் இடம்பெறவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் ஒரே சுழற்பந்துவீச்சாளராக அடில் ரஷித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அணியின் துணை கேப்டனாக பட்லர் அறிவிக்கப்பட்டுள்ளார். இது இங்கிலாந்து அணி விளையாடும் 1000-வது டெஸ்ட்.

இங்கிலாந்து அணி:

ஜோ ரூட் (கேப்டன்), அலாஸ்டர் குக், கீட்டன் ஜென்னிங்ஸ், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், அடில் ரஷித், சாம் கர்ரன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.