செய்திகள்

ஷிகர் தவன் நீக்கம்: கவாஸ்கர் கண்டனம்

DIN

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் ஆட்டத்தில் துவக்க வீரர் ஷிகர் தவனை அணியில் இருந்து நீக்கிய முடிவுக்கு சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. அதில் ஷிகர் தவன் சரிவர ஆடவில்லை. அதே நேரத்தில் தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாம் டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது.
இதில் தவன் அணியில் இடம் பெறவில்லை. மற்றொரு துவக்க வீரர் முரளி விஜய் இடம் பெற்றுள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறியதாவது-
தவனை விட குறைவான ரன்களை எடுத்த முரளி விஜயை சேர்த்துள்ளனர். அதே நேரத்தில் தவனை பலிகடாவாகி விட்டனர். ஒவ்வொரு ஆட்டத்துக்கு பின்னும் தவனை நீக்குவது சரியில்லை. ஏன் அவரை சுற்றுப் பயணத்துக்கு அழைத்துச் சென்றனர்.தனது ஆட்ட முறையில் தொடர்ந்து நம்பிக்கை வைத்து விளையாடி வருகிறார். தவன் அவர் தனது ஆட்ட முறையில் மாற்றம் செய்ய வேண்டும். ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவது வேறு. டெஸ்ட் ஆட்டத்தில் அதுபோன்ற ஷாட்களை அடித்தால் கண்டிப்பாக அவுட் ஆக நேரிடும் என்றார்.
தவனுக்கு பதிலாக புஜாரா சேர்க்கப்பட்டுள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்தியா 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT