செய்திகள்

இந்தியாவுக்கு முதல் தங்கம்: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அபாரம்

DIN

ஆசியப் போட்டி, மல்யுத்தம் ஆடவர் ப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுத் தந்தார் பஜ்ரங் புனியா.
ஆடவர் ப்ரீஸ்டைல் மல்யுத்தம் 65 கிலோ பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா 11-8 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பானின் டைச்சி டகாடனியை வென்று முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் கஸனோவ் சிரோஜித்தினை 13-3 என வென்ற புனியா, காலிறுதியில் 12-2 என தஜிகிஸ்தானின் ஃபைúஸவை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதில் மங்கோலியாவின் பட்மக்னை பட்சுலுனை 10-0 என எளிதாக வென்று இறுதிக்கு முன்னேறினார் புனியா.
இறுதிச் சுற்றில் புனியாவை கையே தொடக்கம் முதல் ஓங்கி இருந்தது. முதல் கட்டத்திலேயே 4-0 என முன்னிலை பெற்ற அவர் இறுதியில் 11-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுத் தந்தார்.
ஜப்பானுக்கு வெள்ளியும், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் இணைந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
பஜ்ரங் புனியா ஏற்கெனவே உலக சாம்பியன் போட்டியில் வெண்கலம், ஆசியப் போட்டியில் (தங்கம், வெள்ளி), ஆசிய சாம்பியன் போட்டியில் (தலா 1 தங்கம், வெள்ளி, வெண்கலம்), யூத் உலகப் போட்டியில் வெள்ளி, காமன்வெல்த் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.
தங்க மகன் பஜ்ரங் புனியாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT