செய்திகள்

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து விஜய், குல்தீப் யாதவ் நீக்கம்: இரு புதிய வீரர்கள் சேர்ப்பு!

மீதமுள்ள இரு டெஸ்டுகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அணியிலிருந்து முரளி விஜய், குல்தீப் யாதவ் ஆகிய இருவரும்...

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டை 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி. 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது டெஸ்ட், ஆகஸ்ட் 30 அன்று தொடங்கவுள்ளது.

இந்நிலையில், மீதமுள்ள இரு டெஸ்டுகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அணியிலிருந்து முரளி விஜய், குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளார்கள். காயம் காரணமாக புவனேஸ்வர் குமாரும் இடம்பெறவில்லை. இளம் வீரர் பிருதிவி ஷாவும் விஹாரியும் இந்திய அணியில் புதிதாக இடம்பெற்றுள்ளார்கள். 3-வது டெஸ்டில் ரிஷப் பண்ட் விளையாடினாலும் தினேஷ் கார்த்திக் அணியில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம்

மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT