டெஸ்ட்: இங்கிலாந்து பேட்டிங்! இந்திய அணியில் மாற்றமில்லை!
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். ஆச்சர்யமாக, இந்திய அணியில் மாற்றங்கள் எதுவுமில்லை...
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். ஆச்சர்யமாக, இந்திய அணியில் மாற்றங்கள் எதுவுமில்லை. கோலி தலைமையில் இதுபோல ஒரு மாற்றமும் இல்லாமல் இந்திய அணி டெஸ்டில் களமிறங்குவது இதுவே முதல்முறை. இங்கிலாந்து அணியில் போப்புக்குப் பதிலாக மொயீன் அலி இடம்பெற்றுள்ளார். வோக்ஸுக்குப் பதிலாக சாம் கரண் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 31 ரன்கள், லார்ட்ஸ் இரண்டாம் டெஸ்டில் 1 இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வென்றது. மூன்றாவது டெஸ்டில், 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அமோக வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
Advertisement