முகப்பு
செய்திகள்

இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு ஓர் இடம்: ஆஸி முன்னாள் கேப்டன் விருப்பம்!

இந்திய அணியில் ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்யவேண்டும் என்று ஆஸி. முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கூறியுள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடுத்த வாரம் டிசம்பர் 6 முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்யவேண்டும் என்று ஆஸி. முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கூறியுள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

கோலி மீது ஆஸி. பந்துவீச்சாளர்கள் அதிகக் கவனம் செலுத்துவார்கள். எனவே கோலியைப் போல இன்னொரு வீரரும் இந்திய அணிக்குப் பலமாக விளங்கவேண்டும். இந்திய அணியினர் ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்துள்ளதைக் கண்டு மகிழ்கிறேன். கோலியைத் தவிர வேறு யாரை விடவும் ஆஸ்திரேலிய சூழலுக்கு ஏற்றாற்போல ரோஹித் சர்மாவால் சிறப்பாக விளையாடமுடியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சரியாகத் தன்னை நிரூபிக்கவில்லை. எனினும் அவரைத்தான் நான் தேர்வு செய்ய விரும்புவேன். இந்தத் தேர்வு துணிச்சலாக முடிவு என்றாலும் அவருடைய பேட்டிங்குக்கு உகந்ததாக ஆஸ்திரேலிய ஆடுகளம் அமையும் என்று கூறியுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments