முகப்பு
செய்திகள்

பரபரப்பான ரஞ்சி ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி தோல்வி!

மேற்கு வங்கம் அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி தோல்வியடைந்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

மேற்கு வங்கம் அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி தோல்வியடைந்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான குரூப் பி பிரிவு 4-ஆவது சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களையும், மேற்கு வங்கம் 189 ரன்களையும் எடுத்தன. இதன்பின் தமிழக அணி இரண்டாவது இன்னிங்ஸில் 141 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து மேற்கு வங்க அணிக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

மேற்கு வங்க அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இரண்டாம் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களை எடுத்தது. மனோஜ் திவாரி 13, ஆமிர் கனி 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்கள். 

Advertisement

வெற்றி பெற 129 ரன்கள் தேவை என்கிற நிலைமையில் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தது மேற்கு வங்க அணி. எனினும் ரஹில் ஷாவின் அற்புதமான பந்துவீச்சால் ஒருகட்டத்தில் 150 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது மேற்கு வங்க அணி. இந்நிலையில் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுதிப் சட்டர்ஜியும் பிரதிப்தா பிரமானிக்கும் சிறப்பாக விளையாடி 200 ரன்கள் தாண்ட உதவினார்கள். எனினும் அணியின் ஸ்கோர் 207 ரன்கள் இருந்தபோது சுதிப்பும் 215 ரன்கள் இருந்தபோது அசோக் டிண்டாவும் ஆட்டமிழந்ததால் ஆட்டம் பரபரப்பானது. எனினும் கடைசியில் தேவையான அந்த ஒரு ரன்னை எடுத்து வெற்றி பெற்றது மேற்கு வங்கம் அணி. அந்த அணி 82.5 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளது. தமிழக அணி சார்பில் ரஹில் ஷா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும் பயனில்லாமல் போய்விட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments