முகப்பு
செய்திகள்

ஒரு ஓவரில் 26 ரன்கள் எடுத்து சதத்தைப் பூர்த்தி செய்த முரளி விஜய் (விடியோ)

அந்த ஓவர் ஆரம்பித்தபோது 74 ரன்களில் இருந்த முரளி விஜய் ஓவர் முடிவில் சதத்தைப் பூர்த்தி செய்துவிட்டார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

ஷேவாக் விளையாடியது போலத்தான் இருந்தது. 

அந்த ஓவர் ஆரம்பித்தபோது 74 ரன்களில் இருந்த முரளி விஜய் ஓவர் முடிவில் சதத்தைப் பூர்த்தி செய்துவிட்டார். 112 பந்துகளில் 74 ரன்களில் இருந்த விஜய், 118 பந்துகளில் சதத்தை அடைந்துவிட்டார். ஜேக் கார்டர் வீசிய அந்த ஓவரில் 4 4 6 2 6 4 என அடுத்தடுத்து சிக்ஸும் பவுண்டரியும் அடித்தார். காயம் காரணமாக முதல் டெஸ்ட் ஆட்டத்திலிருந்து பிருத்வி ஷா  விலகியுள்ளதால் அதில் விளையாட வாய்ப்பு பெற்றுள்ள முரளி விஜய், நல்ல பயிற்சியுடன் முதல் டெஸ்டை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார். 

முதல் டெஸ்ட் ஆட்டம் அடிலெய்டில் வரும் 6 முதல் 10-ஆம் தேதி வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய அணிக்கும், கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கும் இடையே பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. 

Advertisement

முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய சிஏ லெவன் அணி, சிறப்பாக விளையாடி 544 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் நீல்சன் சதமடித்து அசத்தினார். ஹார்டி 86 ரன்கள் எடுத்தார். பின்கள வீரர்கள் நான்கு பேர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குச் சவாலாக அமைந்தார்கள். இதையடுத்து தனது 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. விஜய் 129, ராகுல் 62 ரன்கள் எடுத்தார்கள். இதனால் இந்திய அணி விளையாடிய இந்தப் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments