செய்திகள்

மெஸ்ஸி, ரொனால்டோ ஆதிக்கத்துக்கு முடிவு: பேலன் தோர் விருதை வென்றார் லுகா மொட்ரிக்!

எழில்

2018-ம் ஆண்டுக்கான பேலன் தோர் விருது குரோஸிய வீரர் லுகா மொட்ரிக்குக்கு வழங்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக பேலன் தோர் விருதை ரொனால்டோவும், மெஸ்ஸியும் போட்டிபோட்டு வென்றார்கள். இந்த வருடம் அதை மாற்றியுள்ளார் மொட்ரிக். ரொனால்டோ,மெஸ்ஸியின் 10 ஆண்டுக்கால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரியல் மாட்ரிட் அணி மிட்பீல்டரான அவர் குரோஷிய அணி கேப்டனாகவும் உள்ளார். குரோஷிய அணி ரஷிய உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டாவது இடம் பெறவும், ரியல் மாட்ரிட் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் பட்டம் வெல்லவும் காரணமா இருந்தார். உலகக் கோப்பையிலும் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதை மொட்ரிக் வென்றார். 

உலகின் மிகச்சிறந்த மிட்பீல்டர் என்ற பெயரை பெற்றுள்ள மொட்ரிக், தற்போது பேலன் தோர் விருதுக்கான தேர்வில் போர்ச்சுகலின் ரொனால்டோ, பிரான்சின் கிரீஸ்மன், கிளியன் மாப்பே போன்றோரைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT