செய்திகள்

அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸ்திரேலிய, இந்திய அணிகளின் பட்டியல் வெளியீடு!

எழில்

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் நாளை முதல் அடிலெய்டில் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் ஆட்டத்துக்கான 11 பேர் கொண்ட அணியை இன்றே அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் ஃபிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட்.

இந்திய அணி 12 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இவர்களில் ரோஹித் சர்மா அல்லது விஹாரி ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இடம்பெறமுடியாமல் போகும்.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஹனுமா விஹாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவின் உள்புறங்களில் இஸ்ரேல் ராணுவம்!

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்றக் காவல்!

சுவாதி மலிவால் மீது தாக்குதல்: உரிய நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி உறுதி

இஸ்ரேலை எதிர்க்கும் ஹமாஸ் படையை சேர்ந்த 1,000 பேருக்கு துருக்கியில் சிகிச்சை?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT