முகப்பு
செய்திகள்

தமிழகத்துக்கு எதிராக இரட்டைச் சதத்தை நெருங்கியுள்ள சுப்மன் கில்: பஞ்சாப் 308/2

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் 19 வயது பஞ்சாப் வீரர் சுப்மன் கில் அபாரமாக விளையாடி 199 ரன்களுடன் களத்தில் உள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் 19 வயது பஞ்சாப் வீரர் சுப்மன் கில் அபாரமாக விளையாடி 199 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

மொஹலியில் நடைபெற்று வரும் ரஞ்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் தமிழக அணி 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது தமிழக அணி. மன்ப்ரீத் சிங் கோனி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தமிழக அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 71 ரன்கள் எடுத்துள்ளார்.

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பஞ்சாப் அணி, 2-வது நாள் முடிவில் 79 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது. இளம் வீரர் சுப்மன் கில், அற்புதமாக விளையாடி 234 பந்துகளில் 4 சிக்ஸர், 21 பவுண்டரிகளுடன் 199 ரன்களுடன் களத்தில் உள்ளார். மந்தீப் சிங் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கைவசம் எட்டு விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 93 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது பஞ்சாப் அணி. 

முழு கட்டுரையைப் படிக்க →