செய்திகள்

நியூஸி.க்கு எதிரான டெஸ்ட்: முதல் நாளில் இலங்கை-275/9

DIN


நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை முதல் நாள் முடிவில் 87 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது.
நியூஸிலாந்தில் சனிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அந்நாட்டு அணி பந்துவீச தீர்மானித்தது. 
பேட் செய்த இலங்கையில் அதிகபட்சமாக ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 83 ரன்கள் விளாசினார். கருணாரத்னே 79 ரன்கள் அடித்தார்.
இதர வீரர்களில் தில்ருவன் மட்டும் 16 ரன்கள் எடுக்க, குணதிலகா 1, தனஞ்ஜெயா 1, மெண்டிஸ் 2, கேப்டன் சண்டிமல் 6, லக்மல் 3, ரஜிதா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கடைசியாக நிரோஷன் டிக்வெல்லா 10 பவுண்டரிகள் உள்பட 73 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் உள்ளார். அவருடன் லாஹிரு குமரா ஞாயிற்றுக்கிழமை இணைகிறார்.
நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி 5, நீல் வாக்னர் 2, டிரென்ட் போல்ட், காலின் டி கிராண்ட்ஹோம் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT