பெண் குழந்தைக்கு தந்தையானார் ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோஹித் ஷர்மா, ரித்திகா தம்பதியருக்கு திங்கள்கிழமை பெண் குழந்தை பிறந்தது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 11:31 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோஹித் ஷர்மா, ரித்திகா தம்பதியருக்கு திங்கள்கிழமை பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள ரோஹித் ஷர்மா, மும்பைக்கு பயணமாகிறார்.
எனவே அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் மாற்று வீரர் யாரையும் தேர்வு செய்யவில்லை.
வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்ததற்கு வாழ்த்துகள் என ரோஹித் ஷர்மாவுக்கு பிசிசிஐ வாழ்த்து தெரிவித்துள்ளது.
Advertisement
இந்நிலையில், ஜனவரி 12 -ஆம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்க ரோஹித் ஷர்மா ஜனவரி 8-ஆம் தேதி மீண்டும் ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்கிறார்.