இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களிலிருந்து தென் ஆப்பிரிக்க கேப்டன் விலகல்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபா டூபிளெஸ்ஸிஸ் விலகியுள்ளார். இதற்கு முன்பு நட்சத்திர பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் முதல் 3 ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகினார். இதையடித்து ஃபா டூபிளெஸ்ஸிஸும் விலகியுள்ளார்.
3-வது டெஸ்டில், விராட் கோலி அளித்த கேட்ச்சைப் பிடிக்க முயலும்போது டி வில்லியர்ஸின் வலது கை விரலில் காயம் ஏற்பட்டது. காயம் சரியாகக் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் டி வில்லியர்ஸ் ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபா டூபிளெஸ்ஸிஸ்ஸும் விலகியுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து ஃபர்ஹான் பெஹர்தீன், கிளாசென் ஆகிய இருவரும் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.