முகப்பு
செய்திகள்

ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற நிமிடங்கள்: புகைப்படங்கள் & விடியோக்கள்!

இனிய நிமிடங்களின் புகைப்படங்களும் விடியோக்களும்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:09 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஜூனியர் உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றை இந்திய அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இரு அணிகளுமே தலா 3 முறை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், 4-ஆவது முறையாக வாகை சூட இரு அணிகளுமே கடுமையாகப் போட்டியிட்டன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி 47.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மெர்லோ அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் இஷான் போரெல், ஷிவா சிங், நாகர்கோடி, அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்ட இந்திய அணி, 38.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களில் இலக்கை எட்டி கோப்பையைக் கைப்பற்றியது. மன்ஜோத் கல்ரா 101, தேசாய் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்த இனிய நிமிடங்களின் புகைப்படங்களும் விடியோக்களும்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.