இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை போட்டித் தரவரிசையில் 4-ஆம் இடத்தில் இருக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து எதிர்கொண்டார்.
இதில் துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, சிறப்பாக செயல்பட்டு 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ரட்சனோக் இன்டனோனை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதையடுத்து இந்திய ஓபன் சூப்பர் 500 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாங் பீவனுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.