முகப்பு
செய்திகள்

காயம் காரணமாக குயிண்டன் டி காக் ஒருநாள், டி20 தொடர்களிலிருந்து விலகல்!

டூ பிளெஸ்ஸிஸை அடுத்து விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும்  டி20 தொடர்களிலிருந்து விலகியுள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

டூ பிளெஸ்ஸிஸை அடுத்து விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும்  டி20 தொடர்களிலிருந்து விலகியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 6 ஆட்டங்களைக் கொண்ட தொடரில் 2-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.

காயம் காரணமாக முதல் 3 ஆட்டங்களில் இருந்து நட்சத்திர பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் விலகிய நிலையில், அடுத்ததாக டூ பிளெஸ்ஸிஸும் விலகினார். முதல் ஆட்டத்தில் கை விரலில் காயம் கண்ட அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் மீண்டும் களம் காண 3 முதல் 6 வாரங்கள் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்க தரப்புக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பேட்ஸ்மேன் ஃபர்ஹான் பெஹார்டியன் அணிக்குத் திரும்பினார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கான பின்னடைவாக விக்கெட் கீப்பரும் மூத்த வீரருமான குயிண்டன் டி காக்கும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து விலகியுள்ளார். நேற்று அவர் பேட்டிங் செய்தபோது பூம்ரா பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் திணறினார். இதனால் அவருடைய இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஒருநாள், டி20 தொடர்களிலிருந்து அவர் விலகியுள்ளதாகத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →