முகப்பு
செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

மலேசியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் ஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் அணிக்கு ஸ்ரீகாந்தும், மகளிர் அணிக்கு பி.வி.சிந்துவும் தலைமை வகிக்கின்றனர்.


தில்லியில் நடைபெறும் 'விளையாடு இந்தியா' போட்டிகளில் சிறுவர்களுக்கான ஹாக்கியின் அரையிறுதிகளில் ஒடிஸா-உத்தரப் பிரதேசம், பஞ்சாப்-சண்டீகர் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.


பெங்களூரில் தேசிய கிரிக்கெட் அகாதெமியின் கட்டுமானப் பணிகள் அடுத்த 2 ஆண்டுகளில் நிறைவடையும் நிலையில், பிசிசிஐ தனது தலைமை அலுவலகத்தை மும்பை வான்கடே மைதானத்தில் இருந்து, பெங்களூருக்கு மாற்றலாம் எனத் தெரிகிறது.


இந்திய பாட்மிண்டன் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கோவா மாநிலத்தில் மார்ச் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


தில்லி துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் தலைவராக துப்பாக்கி சுடுதல் முன்னாள் வீரர் ஜஸ்பால் ராணா தேர்வு செய்யப்பட்டார்.


இந்திய கேப்டன் விராட் கோலியின் எந்தவொரு செயலிலும் எதிர்மறை என்பது எள்ளளவும் இருக்காது என்று அணி வீரர்களில் ஒருவரான அஸ்வின் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.