செய்திகள்

ஆட்டநாயகன் மேக்ஸ்வெல் அசத்தல் சதம்: 2-ஆவது டி20-யில் ஆஸி. அபார வெற்றி!

Raghavendran

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

இதில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஹோபார்டில் புதன்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டேவிட் வார்னர், பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக டேவிட் மாலன் 50 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலிய தரப்பில் கிளென் மேக்ஸ்வெல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் சதம் விளாசினார்.

மொத்தம் 58 பந்துகளைச் சந்தித்து 10 பவுண்டரி, 4 இமாலய சிக்ஸர்களுடன் 103 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆஸ்திரேலிய அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் தனது 2-ஆவது சதத்தை பதிவு செய்தார்.

பேட்டிங்கில் சதமும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்திய கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொது வாழ்க்கையில் இருந்து பிரதமர் மோடி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா

தமிழகத்தின் மாரியப்பனுக்கு தங்கம்: பட்டத்தை தக்கவைத்தார் சுமித் அன்டில்

இன்று எலிமினேட்டர்: ராஜஸ்தான் - பெங்களூரு பலப்பரீட்சை

ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்: இந்திய அணிகளுக்கு வெள்ளி

SCROLL FOR NEXT