முகப்பு
செய்திகள்

மும்பை ஐபிஎல் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக மலிங்கா நியமனம்!

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையைச் சேர்ந்தவரும் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரருமான...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:12 PM
பகிர்:

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையைச் சேர்ந்தவரும் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரருமான லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல்-லில் இதுவரை 110 ஆட்டங்களில் விளையாடியுள்ள மலிங்கா, 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்கிற சாதனையையும் அவர் தக்கவைத்துக்கொண்டுள்ளார். (அடுத்த இடத்தில் உள்ளவர் மிஸ்ரா - 126 ஆட்டங்களில் 134 விக்கெட்டுகள்)

இந்த ஐபிஎல் ஏலத்தில் மலிங்காவை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை (அடிப்படை விலை ரூ. 1 கோடி). எனினும் தற்போது மும்பை ஐபிஎல் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். 

மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக மஹேலா ஜெயவர்தனேவும் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஷேன் பாண்டும் பேட்டிங் பயிற்சியாளராக ராபின் சிங்கும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் பம்மெண்டும் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.