செய்திகள்

குளிர்கால ஒலிம்பிக்: முதல் தங்கம் வென்றது கனடா

DIN

பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஃபிகர் ஸ்கேட்டிங் பிரிவில் கனடா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்கில் கனடா இதுவரை 5 பதக்கங்கள் வென்றுள்ள நிலையில், இது அந்நாட்டுக்கு கிடைத்துள்ள முதல் தங்கப் பதக்கமாகும். இதே நாளில் கனடா தனது 2-ஆவது தங்கத்தையும் வென்றது.
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்கத்துக்கான போட்டிகள் யாவும் கடந்த சனிக்கிழமை தொடங்கின. இந்நிலையில், 3-ஆவது நாளான திங்கள்கிழமை பையத்லான், ஃபிகர் ஸ்கேட்டிங், ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங், ஸ்கை ஜம்பிங், ஸ்னோபோர்டு, ஸ்பீடு ஸ்கேட்டிங் ஆகிய 6 பிரிவுகளில் பதக்கப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் ஃபிகர் ஸ்கேட்டிங் போட்டியானது காங்னியூங் நகரில் உள்ள பனிச்சறுக்கு ஆட்ட மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கனடாவின் டெசா விர்சு-ஸ்காட் மொயர் ஜோடி 118.10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை கைப்பற்றியது.
பனியில் சறுக்கியவாறு சுமார் நான்கரை நிமிடங்கள் நடனம் நிகழ்த்திய டெசா-ஸ்காட் ஜோடிக்கு இது 3-ஆவது ஒலிம்பிக் போட்டியாகும். இதே போட்டியில் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்ட ரஷியாவின் எகாடெரினா பாப்ரோவா-டிமிட்ரி சோலோவீவ் ஜோடி வெள்ளிப் பதக்கம் வெல்ல, அமெரிக்காவின் மாயா ஷிபுடானி-அலெக்ஸ் ஷிபுடானி ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.
இதனிடையே, மகளிருக்கான ஜெயன்ட் ஸ்லாலோம் போட்டி பலத்த காற்று காரணமாக வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
3-ஆவது நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் ஜெர்மனி 4 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என அதே 7 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்திலும், நார்வே 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT