செய்திகள்

டி20 தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு: டி வில்லியர்ஸ் விலகல்

டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக டி வில்லியர்ஸ் விலகியுள்ளார்.

Raghavendran

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி வென்றது. 

இதையடுத்து நடைபெற்ற 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 5-1 என்ற கணக்கில் இந்தியா மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.

தற்போது, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஜோஹன்னஸ்பர்கில் நடைபெற்ற முதல் டி20-யில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், 5-ஆவது ஒருநாள் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸுக்கு காயம் ஏற்பட்டது. இது தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளதால், அடுத்து நடைபெறும் 2 டி20 போட்டியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் மாற்று வீரர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

டி வில்லியர்ஸுக்கு ஏற்பட்டுள்ள காயம் தீவிரமடைந்துள்ளதால் அவருக்கு போதிய சிகிச்சையும், ஓய்வும் தேவை எனவே அடுத்த 2 போட்டிகளிலும் பங்கேற்கமாட்டார் என்று தென் ஆப்பிரிக்க அணி நிர்வாக இயக்குநர் டாக்டர் முகமது மோஸேஜ் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

சும்மா இரு மனமே... நந்திதா ஸ்வேதா!

நீலகிரி, கோவைக்கு நாளை(ஆக. 5) ரெட் அலர்ட்!

சப்தமின்றி தனிமையில்... கர்விதா சத்வானி

தமிழ்நாடுதான் இந்திய மின் வாகன உற்பத்தியின் Capital - முதல்வர் Stalin

SCROLL FOR NEXT