செய்திகள்

நியூயார்க் ஓபன்: கெவின் சாம்பியன்

DIN

அமெரிக்காவில் நடைபெற்ற நியூயார்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சன் சாம்பியன் ஆனார். இது அவரது டென்னிஸ் வாழ்க்கையில் 4-ஆவது பட்டமாகும்.
முன்னதாக இறுதிச்சுற்றில் அமெரிக்கரான சாம் கெர்ரியுடன் மோதிய ஆன்டர்சன், 4-6, 6-3, 7-6(7/1) என்ற செட்களில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி 13 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் உள்பட 11 இறுதி ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ள ஆன்டர்சன், இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டிலேயே ஆன்டர்சன் 2-0 என முன்னிலை பெற்றார். விடாமல் போராடிய கெர்ரி 2-2 என சமன் செய்தார். ஒரு கட்டத்தில் ஆன்டர்சனின் சர்வை பிரேக் செய்த கெர்ரி, 5-3 என முன்னிலைபெற்றார். இறுதியில் அவரே 6-3 என செட்டை கைப்பற்றினார்.
2-ஆவது செட்டில் தனது சர்வில் இருந்த தவறுகளை திருத்திக் கொண்ட ஆன்டர்சன், 5-0 என ஆக்ரோஷமாக முன்னேறினார். சற்றே தடுமாறிய கெர்ரி 3 கேம்களை கைப்பற்றி மீண்டபோதும், ஆன்டர்சன் 6-3 என அந்த செட்டை முடித்து வைத்தார்.
வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டில் இருவருமே ஆக்ரோஷமாக ஆட, அந்த செட் டை பிரேக்கர் வரை சென்றது. ஆன்டர்சன் 5-0 என முன்னேறியபோது கெர்ரி ஆக்ரோஷத்தில் தனது ராக்கெட்டை உடைத்தெறிந்தார். இறுதியில் அந்த செட்டையும் ஆன்டர்சன் கைப்பற்றி சாம்பியன் ஆனார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT