அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றம் உருவாகப் போகிறதா?: கமல் அரசியல் பிரவேசம் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின்
கமலின் அரசியல் பிரவேசத்துக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன. பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டரில்...
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இன்று தனது அரசியல் பயணத்தைத் தொடங்கும் நடிகர் கமல்ஹாசன், கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அறிவிக்கிறார்.
இன்று காலை முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்துக்குச் சென்ற கமல்ஹாசன், அங்கு கலாமின் குடும்பத்தினரைச் சந்தித்தார். அதன் பிறகு மீனவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவிக்கிறார்.
இந்நிலையில் கமலின் அரசியல் பிரவேசத்துக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன. பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டரில் கூறியதாவது:
Advertisement
தமிழ்நாட்டிலிருந்து இன்னொரு நட்சத்திர நடிகர், இன்று மாலை தனது அரசியல் கட்சியைத் தொடங்கும் நாள் இது. அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றம் உருவாகப் போகிறதா? என்று கமல் அரசியல் பிரவேசம் குறித்து எழுதியுள்ளார்.