செய்திகள்

வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ஊக்கப் பரிசு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

DIN

ஆசிய தடகளப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கப் பரிசுகளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
ஒடிசாவில் நடைபெற்ற 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 5 ஆயிரம் மீட்டர், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கம் வென்ற ஜி.லட்சுமணனுக்கு ரூ.20 லட்சத்துக்கான காசோலையையும், 
4ல400 தொடர் ஓட்டப் பந்தயத்தில் தங்கமும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளியும் வென்ற எஸ்.ஆரோக்கிய ராஜிவுக்கு ரூ.15 லட்சமும், 4ல 400 தொடர் ஓட்டப் பந்தய தகுதிச்சுற்று போட்டியில் தங்கம் வென்ற ஆர்.மோகன் குமாருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வர் வழங்கினார்.
கனடாவில் நடைபெற்ற 7-ஆவது உலக அளவிலான உயரம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்கள் வென்ற கே.கணேசனுக்கு ரூ.15 லட்சத்துக்கான காசோலையையும், ஈட்டி எறிதல் போட்டியில் 1 தங்கமும், குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் தலா 1 வெள்ளியும் வென்ற சி.மனோஜுக்கு ரூ. 11 லட்சத்துக்கான காசோலையையும், ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற அ.செல்வராஜுக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும், இவர்களின் பயிற்சியாளர்கள் ரஞ்சித்குமார், சுந்தர் ஆகியோருக்கு ரூ.4.65 லட்சத்துக்கான காசோலைகளையும் முதல்வர் வழங்கினார்.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் 9-ஆவது ஆசிய வயதுப் பிரிவினருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் நீச்சல் பிரிவில் 1 தங்கமும், 1 வெள்ளியும், 2 வெண்கலமும் என மொத்தம் 4 பதக்கங்கள் வென்ற பி.விக்காஸுக்கு ரூ. 9.50 லட்சத்துக்கான காசோலையையும், 1 தங்கம் வென்ற வி.லெனார்ட்டுக்கு ரூ.4 லட்சத்துக்கான காசோலையையும்,1 வெள்ளிப் பதக்கம் வென்ற சு.தனுஷுக்கு ரூ.2.50 லட்சத்துக்கான காசோலையையும் இவர்களின் பயிற்சியாளர்கள் ஏ.சரோஜினி தேவி, ஏ.கர்ணன், வி.வீரபத்ரன் ஆகியோருக்கு ரூ.2.40 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வர் வழங்கினார்.
9 விளையாட்டு வீரர்கள், 5 பயிற்சியாளர்களுக்கு என மொத்தம் ரூ.99.5 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT