முகப்பு
செய்திகள்

ஆஷஸ்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது ஆஸ்திரேலியா...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:54 AM
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது ஆஸ்திரேலியா.

சிட்னியில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் மழை காரணமாக மதிய உணவு இடைவேளை வரையில் ஆட்டம் நடைபெறவில்லை. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. முதல் நாள் முடிவில் 81.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. டேவிட் மலான் 55 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இந்நிலையில் இங்கிலாந்து அணி இன்று 346 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மலான் 62 பந்துகளில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி சரிவைச் சந்தித்தது. அலி, கரன், பிராட் ஆகியோர் 30 ரன்கள் வரை தாக்குப்பிடித்தாலும் அதற்கு மேல் அவர்களால் களத்தில் நின்று அதிக ரன்கள் எடுக்கமுடியாமல் போனது. இதனால் 350 ரன்கள் கூட தாண்டமுடியாமல் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். 

சிறப்பான பந்துவீச்சை அடுத்து நம்பிக்கையுடன் களமிறங்கினார்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள். ஆனல பேன்கிராப்ட் ரன் எதுவும் எடுக்காமல் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு இங்கிலாந்து அணிக்குப் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. நிதானமாக விளையாடி வார்னரும் கவாஜாவும் ஸ்கோரை உயர்த்தினார்கள். 104 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த வார்னர் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த ஸ்மித்தும் நன்கு விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் திட்டங்களை முறியடித்தார். 

2-ம் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 91, ஸ்மித் 44 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.