ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி ஆஸி.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி சிட்னி நகரில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 112.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 83 ரன்கள் எட்டினார். ஆஸ்திரேலியாவின் பேட்ரிக் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் குவித்தது. கவாஜா மற்றும் மார்ஷ் சகோதரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். கவாஜா 171, ஷான் மார்ஷ் 156, மிட்செல் மார்ஷ் 101 ரன்கள் விளாசினர்.
Advertisement
பின்னர் 303 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளுக்கு 93 ரன்களுக்கு திணறி வருகிறது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 2 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
இன்னும் ஒருநாள் ஆட்டம் மீதமிருக்கையில் இங்கிலாந்து அணி கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளன. இருப்பினும் 210 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.