செய்திகள்

முகமது ஹபீஸ் அதிரடியால் 262 ரன்கள் எடுத்த பாகிஸ்தான்!

எழில்

ஹாமில்டனில் நடைபெற்று வரும் நியூஸிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஃபகார் ஸமான் (54 ரன்கள்), ஹாரிஸ் சோஹைல் (50 ரன்கள்), முகமது ஹபீஸ் (81 ரன்கள்), சர்பராஸ் அகமது (51 ரன்கள்) என நான்கு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அரை சதம் எடுத்தார்கள். இதில் முகமது ஹபீஸ் 4 சிக்ஸர்களும் சர்பராஸ் 3 சிக்ஸர்களும் அடித்தார்கள். போல்ட் வீசிய 50-வது ஓவரில் ஹபீஸ் 3 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்து கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆனார். அந்த ஓவரில் மட்டும் பாகிஸ்தானுக்கு 22 ரன்கள் கிடைத்தன. கடைசி 5 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்ததால் பாகிஸ்தான் அணி கெளரவமான ஸ்கோரை அடையமுடிந்தது. நியூஸிலாந்துத் தரப்பில் செளதி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன், நிகோல்ஸ் களத்தில் உள்ளார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT