செய்திகள்

தேசிய கூடைப்பந்து: தமிழகம் வெற்றி

DIN

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டங்களில் இரு பாலர் பிரிவுகளில் தமிழகம் வெற்றி பெற்றது.
ஆடவர் மற்றும் மகளிருக்கான 68-ஆவது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கியது.
இதில் ஆடவர் பிரிவில் 'தகுதி-1'-இன் 'பி' பிரிவு ஆட்டத்தில் தமிழகம் 113-58 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணாவை வென்றது. அதிகபட்சமாக தமிழகத்தின் ஜஸ்டின் 22, ஹரியாணாவின் அங்கித் 18 புள்ளிகள் வென்றனர். அதேபோல், பஞ்சாப் 76-65 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. பஞ்சாப் வீரர் குர்வீந்தர் சிங், குஜராத் வீரர் ஹர்பால் அதிக புள்ளிகள் வென்றனர்.
'ஏ' பிரிவு ஆட்டத்தில் உத்தரகண்ட் 85-62 என்ற கணக்கில் ஒடிஸாவை வென்றது. உத்தரகண்ட் வீரர் மோஹித் பந்தாரி, ஒடிஸா வீரர் சுமன் சாஹு அதிக புள்ளிகளை கைப்பற்றினர். ஆந்திர பிரதேசம் 76-75 என்ற கணக்கில் ஜம்மு காஷ்மீரையும், புதுச்சேரி 54-22 என்ற கணக்கில் தெலங்கானாவையும், சத்தீஸ்கர் 49-32 என்ற கணக்கில் கோவாவையும், உத்தரப் பிரதேசம் 88-76 என்ற கணக்கில் மேற்கு வங்கத்தையும் வென்றன.
தமிழக மகளிர் வெற்றி: இப்போட்டியின் மகளிர் பிரிவில் தமிழகம் 68-48 என்ற புள்ளிகள் கணக்கில் மத்திய பிரதேசத்தை வென்றது. அதேபோல், ராஜஸ்தான் 89-61 என்ற புள்ளிகள் கணக்கில் தெலங்கானாவை வென்றது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஏ.எஸ்.தாம்பியும், தெலங்கானா அணியில் நிஷா சர்மாவும் அதிக புள்ளிகள் பெற்றனர்.
மற்றொரு ஆட்டத்தில் தில்லி 39-89 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய ரயில்வேயிடம் வீழ்ந்தது. இந்திய ரயில்வேயில் மேனனும், தில்லியில் பிரதிமா சிங்கும் அதிக புள்ளிகள் ஸ்கோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT