செய்திகள்

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக எல். பாலாஜி நியமனம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக லட்சுமிபதி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்...

எழில்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக லட்சுமிபதி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏப்ரம் மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங்கும் பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹஸ்ஸியும் நியமிக்கப்பட்டுளார்கள். இந்நிலையில் பந்துவீச்சுப் பயிற்சியாளராக எல். பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பாலாஜி பணியாற்றினார். ஐபிஎல்-லின் ஆரம்பத்தில் மூன்று வருடங்கள் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார்.

மீண்டும் சென்னை அணிக்குத் திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. என் திறமையை அங்கீகரித்ததில் சென்னை அணிக்கு நன்றியுடையவனாக இருப்பேன் என்று பாலாஜி கூறியுள்ளார். சென்னை அணிக்குத் தேர்வாகியுள்ள சுரேஷ் ரெய்னாவும் பாலாஜியின் நியமனத்தை வரவேற்று ட்வீட் செய்துள்ளார்.

எல். பாலாஜி, இந்திய அணிக்காக எட்டு டெஸ்டுகள், 30 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

SCROLL FOR NEXT