செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்றில் ரோஹன் போபண்ணா ஜோடி!

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஹங்கேரியின் டிமியா பாபோஸ் ஜோடி இறுதிச்சுற்றுக்குத் தகுதி...

எழில்

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஹங்கேரியின் டிமியா பாபோஸ் ஜோடி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

மெல்போர்ன் நகரில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதிச்சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஹங்கேரியின் டிமியா பாபோஸ் மற்றும் மார்டினஸ் சான்சஸ் - டெமோலினர் ஜோடிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-5, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் போபண்ணா ஜோடி வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது.

இறுதிச்சுற்றில் போபண்ணா - பாபோஸ் ஜோடி, பவிக் - டப்ரோவ்ஸ்கி ஜோடியை எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT