செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிச்சுற்றில் ஃபெடரர்!

எழில்

மெல்போர்ன் நகரில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஹியோன் சங்கை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளார் உலகின் 2-ஆம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், தென் கொரியாவின் ஹியோன் சங்கும் மோதினார்கள். இதில், 6-1 5-2 என்கிற நிலையில் ஃபெடரர் முன்னிலை பெற்றிருந்தபோது காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலகினார் ஹியோன். இதையடுத்து அரையிறுதியில் ஃபெடரர் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் ஃபெடரர் இதுவரை ஆடிய அனைத்து ஆட்டங்களிலுமே ஒரு செட் கூட இழக்காமல் நேர் செட்களில் வென்று வந்துள்ளார். ஹியோன் சங்குக்கு எதிரான ஃபெடரரின் அரையிறுதி வெற்றியானது, ஆஸ்திரேலிய ஓபனில் அவர் இதுவரை ஆடிய 106 ஆட்டங்களில் பெற்ற 93-ஆவது வெற்றியாகும். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இது அவரது அதிகபட்ச வெற்றி கணக்காகும். ஞாயிறன்று தனது 30-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றில் பங்கேற்கிறார் ஃபெடரர்.

இறுதிச்சுற்றில் குரோஷியாவின் மரின் சிலிச்சை ஃபெடரர் எதிர்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT