செய்திகள்

தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: அணிக்குத் திரும்பினார் சுரேஷ் ரெய்னா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார்.

Raghavendran

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது.

இதில் சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. பின்னர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மேதவுள்ளன.

பிப்ரவரி 18 ஜோஹன்னஸ்பர்க்கில் முதல் டி20, பிப்ரவரி 21 செஞ்சூரியனில் 2-ஆவது டி20, பிப்ரவரி 24 கேப்டவுனில் 3-ஆவது டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுரேஷ் ரெய்னா இடம்பிடித்துள்ளார்.

கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்குப் பிறகு சுமார் ஒரு வருடத்துக்குப் பின்னர் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் ஒரு சதம், 2 அரை சதங்கள் உட்பட 314 ரன்களைக் குவித்துள்ளார்.

டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே, அக்ஷர் படேல், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஜயதேவ் உனாட்கட், ஷர்துல் தாக்கூர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT