முகப்பு
செய்திகள்

ரோஹித் சர்மா சதம்: பல சாதனைகள் முறியடிப்பு!

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் குறைந்தபட்சம் மூன்று சதங்கள் எடுத்துள்ள முதல் வீரர் - ரோஹித் சர்மா...

செய்திகள்

ரோஹித் சர்மா சதம்: பல சாதனைகள் முறியடிப்பு!

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் குறைந்தபட்சம் மூன்று சதங்கள் எடுத்துள்ள முதல் வீரர் - ரோஹித் சர்மா...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:10 PM
பகிர்:

இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி 20 தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. இந்த ஆட்டத்தில் சதமடித்த ரோஹித் சர்மா, பல சாதனைகள் புரிந்துள்ளார். 

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான 3-ம் டி 20 கிரிக்கெட் ஆட்டம் பிரிஸ்டல் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 198 ரன்களைக் குவித்தது.  இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹார்திக் பாண்டியா அபாரமாகப் பந்து வீசி 4/38 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கெளல் 2, சஹார், உமேஷ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். தோனி 5 கேட்சுகள் பிடித்தும் ஒரு ரன் அவுட்டை நிகழ்த்தியும் அசத்தினார்.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 18.4 ஓவர்களிலேயே 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 5 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 56 பந்துகளில் 100 ரன்களை குவித்து ரோஹித்தும், 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 33 ரன்களுடன் பாண்டியாவும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தலா 2 சிக்ஸர், பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்தார் கோலி. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்குக் கிடைத்தது.

ரோஹித் சர்மா சதம்: புதிய சாதனைகள்

* நியூஸிலாந்தின் காலின் மன்றோ சர்வதேச டி20 ஆட்டங்களில் மூன்று சதங்கள் எடுத்துள்ளார். அந்தச் சாதனையை நேற்று சமன் செய்தார் ரோஹித் சர்மா. 

* டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் குறைந்தபட்சம் மூன்று சதங்கள் எடுத்துள்ள முதல் வீரர் - ரோஹித் சர்மா. 

3 டெஸ்ட் சதங்கள்
3+ ஒருநாள் சதங்கள் (17)
3 டி20 சதங்கள்

டி20 சர்வதேச ஆட்டங்கள்

அதிக 100+ ரன்கள்: ரோஹித் சர்மா/மன்றோ (3)
அதிக 75+ரன்கள்: ரோஹித் சர்மா/கெய்ல் (8)
அதிக 50+ ரன்கள்: ரோஹித் சர்மா/கோலி  (18)

* சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில், இந்திய வீரர்களில் அதிகபட்ச ஐந்து தனிநபர் ஸ்கோர்களில் மூன்று, ரோஹித் சர்மாவுக்கு உரியது. அதேபோல சர்வதேச டி20 ஆட்டங்களில் இந்திய வீரர்களில் அதிகபட்ச மூன்று தனிநபர் ஸ்கோர்களில் இரண்டு, ரோஹித் சர்மாவுக்கு உரியது.

ஒருநாள் - அதிகபட்ச ரன்கள் - இந்திய வீரர்கள்

1. ரோஹித் சர்மா - 264 ரன்கள்
2. சேவாக் - 219 ரன்கள்
3. ரோஹித் சர்மா - 209 ரன்கள்
4. ரோஹித் சர்மா - 208* ரன்கள்
5. சச்சின் - 200* ரன்கள்

டி20 - அதிகபட்ச ரன்கள் - இந்திய வீரர்கள்

1. ரோஹித் சர்மா - 118 ரன்கள்
2. ராகுல்- 110* ரன்கள்
3. ரோஹித் சர்மா - 106 ரன்கள்

* அனைத்துவிதமான டி20 ஆட்டங்களில் 5 சதங்கள் எடுத்துள்ளார் ரோஹித் சர்மா. ஆசிய பேட்ஸ்மேன்களில் அதிக சதங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ரோஹித்துக்கு முதலிடம். கோலியும் ரெய்னாவும் 4 சதங்கள் எடுத்துள்ளார்கள். 

ரோஹித் சர்மா - டி20 சதங்கள்

ரோஹித் சர்மா (மும்பை) - 101* v குஜராத், 2007 - டி20 ஆட்டங்களில் சதமடித்த முதல் இந்திய வீரர் 
ரோஹித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்) - 109* v கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2012
ரோஹித் சர்மா (இந்தியா) - 106 v தென் ஆப்பிரிக்கா, 2015
ரோஹித் சர்மா (இந்தியா) - 118 v இலங்கை, 2017
ரோஹித் சர்மா (இந்தியா) -100* v இங்கிலாந்து, 2018

* சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் மூன்று இரட்டைச் சதங்களும் சர்வதேச டி20 ஆட்டங்களில் மூன்று சதங்களும் எடுத்து தன்னிகரற்ற தொடக்க வீரராக உள்ளார் ரோஹித் சர்மா. 

* சர்வதேச டி20 ஆட்டங்களில் 2000 ரன்களைக் கடந்துள்ளார் ரோஹித் சர்மா. இதை நிகழ்த்தும் 5-வது வீரர். 

* டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் தொடர் நாயகன் விருது பெற்ற இந்திய வீரர்கள்: 

விராட் கோலி
புவனேஸ்வர் குமார்
ரோஹித் சர்மா.

முழு கட்டுரையைப் படிக்க →