செய்திகள்

விம்பிள்டனில் புதிய சாதனை: முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றவர்கள்! (படங்கள்)

இதுவே முதல்முறை என்பதால் இந்த எட்டு வீராங்கனைகளும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்கள்...

எழில்

கிராண்ட்ஸ்லாம் ஓபன் எராவில் இப்படி நடைபெற்றதில்லை. இதுவே முதல்முறை என்பதால் இந்த எட்டு வீராங்கனைகளும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்கள்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. 

இந்த வருட விம்பிள்டன் போட்டியில் மகளிர் பிரிவில் காலிறுதிக்குத் தகுதி பெற்ற எட்டு வீராங்கனைகளும் போட்டித் தரவரிசையில் டாப் 10-க்கு வெளியே உள்ளவர்கள். ஓபன் எரா காலக்கட்டத்தில் எந்தவொரு கிராண்ட்ஸ்லாமிலும் இதுபோல நடைபெற்றதில்லை. (ஓபன் எரா - 1968-ல் அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அது முதலான காலமே "ஓபன் எரா' ஆகும்.)

2018 விம்பிள்டன் போட்டி: காலிறுதிக்குத் தகுதி பெற்ற வீராங்கனைகளும் போட்டித் தரவரிசைகளும்

#11 - ஏஞ்சலினா கெர்பர் 
#12 - ஜெலினா 
#13 - ஜூலியா கார்ஜஸ் 
#14 - டரியா கசாத்கினா 
#20 - கிகி பெர்டென்ஸ் 
#25 - செரீனா வில்லியம்ஸ் 
**  - கமிலா ஜியார்ஜி 
**  - டொமினிகா சிபுல்கோவா 

** போட்டித் தரவரிசையில் இடம்பிடிக்காதவர்கள் 

முன்னணி வீராங்கனைகளான ஷரபோவா, பெட்ரா விட்டோவா, வோஸ்னியாக்கி, சிமோனா ஹலேப், ஸ்லோன், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் முந்தைய சுற்றுகளில் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறி விட்டனர். இதனால் டாப் 10-க்கு வெளியே உள்ள வீராங்கனைகள் இந்த வருட விம்பிள்டன் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். 

காலிறுதிப் போட்டிகள்

ஏஞ்சலினா vs டரியா கசாத்கினா
ஜெலினா vs டொமினிகா
கிகி பெர்டென்ஸ் vs ஜூலியா கார்ஜஸ் 
செரீனா வில்லியம்ஸ் vs கமிலா ஜியார்ஜி

ஏஞ்சலினா கெர்பர்
ஜெலினா
ஜூலியா கார்ஜஸ்
டரியா கசாத்கினா
கிகி பெர்டென்ஸ்
செரீனா
கமிலா
டொமினிகா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்று மாசு ஏற்படுவதால் குழந்தைகளுக்கு அதிகம் பாதிப்பு!

மாா்கழி கிருத்திகை: வல்லக்கோட்டையில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

காமாட்சி அம்மனுக்கு தங்க ஒட்டியாணம்: காஞ்சி சங்கராசாரியா்கள் அளித்தனா்

நில முறைகேட்டில் ஈடுபட்ட இருவா் மீது வழக்கு

அதிமுக ஆட்சியில் தான் போதை கலாசாரம் தொடக்கம்: அமைச்சா் எம்ஆா்கே பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT