செய்திகள்

12 ஆண்டுகளில் முதல் முறை: இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்

DIN

கடந்த 12 ஆண்டுகளில் பிரான்ஸ் அணி முதல் முறையாக, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தப் பெருமையை 
அந்த அணிக்கு பெற்றுத் தந்தவர் சாமுவேல் உதிதி.
2018 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் அணியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது பிரான்ஸ். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் அந்த அணி பெல்ஜியத்தை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
இதன் மூலமாக உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-ஆவது முறையாக பிரான்ஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கடந்த 1984, 2000 ஆண்டுகளில் உலகக் கோப்பை பட்டம் வென்ற நிலையில், தற்போது 3-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது அந்த அணி.
முன்னதாக, அரையிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் ஆதிக்கம் செலுத்திய நிலையில், 2-ஆவது பாதியில் பிரான்ஸ் தனது தாக்கத்தை அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்டத்தின் 51-ஆவது நிமிடத்தில் சக வீரரான கிரைஸ்மேன் கார்னரில் இருந்து உதைத்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார் பிரான்ஸ் வீரர் சாமுவேல் உதிதி. இறுதிவரை பெல்ஜியம் கோல் அடிக்காததால் பிரான்ஸ் 1-0 என வென்றது.


எங்கள் அணி வீரர்களின் வளர்ச்சி அபரிமிதமானது. அடுத்த இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளில் அவர்கள் இன்னும் பலமிக்கவர்களாக உருவெடுப்பார்கள். ஆனால், தற்போதே அவர்கள் மிகச்சிறந்த போட்டியாளர்களாக இருக்கின்றனர். நாங்கள் அனைத்தையும் சரியாகச் செய்யவில்லை என்றபோதிலும், ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டியுள்ளோம். எனது அணி வீரர்களுக்காக பெருமைப்படுகிறேன்.
- பிரான்ஸ் பயிற்சியாளர் டைடியர் டெஸ்சாம்ப்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT