செய்திகள்

உலக தடகள சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற 18 வயது ஹிமா தாஸ்! புல்லரிக்க வைக்கும் தருணங்களின் விடியோ!

கடைசி 80 மீ. தூரத்தில் மூன்று வீராங்கனைகளை வீழ்த்தி தங்கம் வென்றார்...

எழில்

20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் 400 மீ. போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  

பின்லாந்தின் டாம்பியர் நகரில் உலக தடகள சாம்பியன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடைபெற்ற 400 மீ. இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஹிமா தாஸ், 51.46 வினாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கம் வென்று சாதனை படைத்தார். சர்வதேச அளவில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

20 வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வட்டு எறிதல் வீராங்கனைகளான சீமா புனியாவும் நவ்ஜீத் கெளரும் வெண்கலம் வென்றுள்ளார்கள். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். ஆனால் தடகள வீரர்கள் எவரும் சர்வதேசப் போட்டிகளில் தங்கம் வென்றதில்லை என்கிற குறையை ஹிமா தாஸ் போக்கியுள்ளார். 

இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் சற்று நிதானமாக ஓடிய ஹிமா, கடைசி 80 மீ. தூரத்தில் மூன்று வீராங்கனைகளை வீழ்த்தி தங்கம் வென்றார். அதன் காணொளி:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT