செய்திகள்

மைதானத்திலேயே காதலை வெளிப்படுத்திய வாலிபரின் விடியோ

2-ஆவது ஒருநாள் போட்டியின் போது மைதானத்திலேயே வாலிபர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்திய சம்பவம் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.

Raghavendran

2-ஆவது ஒருநாள் போட்டியின் போது மைதானத்திலேயே வாலிபர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்திய சம்பவம் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 2-ஆவது போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 113 ரன்கள் விளாசினார். கேப்டன் மோர்கன் 53, வில்லி 50 ரன்கள் விளாசினர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரில் சமநிலை பெற்றது. எனவே 3-ஆவது போட்டியில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, 24-ஆவது ஓவரின் போது அந்த சிறப்பான சம்பவம் நடைபெற்றது. வாலிபர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்தினார். அத்தனை பேர் கூடியிருந்த மைதானத்தில் பல கேமராக்கள் சூழ்ந்திருந்த தருணத்தில், திடீரென அந்த வாலிபர் வீசிய காதல் பௌன்சரை அப்பெண் அதிரடியாக எதிர்கொண்டு (உடனடியாக ஒப்புக்கொண்டு) சிக்ஸர் விளாசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுண்ணறிவுக்குப் புலப்படாது!

காரையாறு காணிக்குடியிருப்பில் சிறுத்தை தாக்கி இளைஞா் காயம்

கும்ப ராசிக்குப் பணவரவு: தினப்பலன்கள்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

SCROLL FOR NEXT