செய்திகள்

ஆயிரமாவது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு ஐசிசி வாழ்த்து

Raghavendran

ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் அடியெடுத்து வைக்கும் இங்கிலாந்து அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்டு 1-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. எட்பாஸ்டனில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து அணி களமிறங்கும் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.

இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) தலைவர் சஷாங் மனோகர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டதாவது:

ஒட்டுமொத்த கிரிக்கெட் குடும்பத்தின் சார்பாக ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் அடியெடுத்து வைக்கும் இங்கிலாந்து அணிக்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். இதன்மூலம் ஆயிரம் டெஸ்ட் போட்டிகளைக் கண்ட முதல் அணி என்கிற சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. இனிவரும் காலங்களிலும் சிறப்புமிக்க பல வீரர்களை அந்த அணி உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதில் பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டியை சுவாரஸ்யமாக்கும் வகையிலான ஆட்டங்களை அளிக்க வேண்டும் என்றிருந்தது.

கடந்த 1877-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடியது. அதன்பின்னர் இதுவரை நடைபெற்ற 999 டெஸ்ட் போட்டிகளில் 357 வெற்றிகள், 297 தோல்விகள் பெற்றதுடன் 345 போட்டிகளில் வெற்றி, தோல்வியின்றி டிரா செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT