நார்வே செஸ்: வெற்றி பெறுவாரா விஸ்வநாதன் ஆனந்த்
அல்டிபாக்ஸ் நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதல் வெற்றியை எதிர்நோக்கி உள்ளார்.
அல்டிபாக்ஸ் நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதல் வெற்றியை எதிர்நோக்கி உள்ளார்.
5 முறை உலக சாம்பியனான ஆனந்த் இதுவரை ஆடிய 6 சுற்று ஆட்டங்களும் டிராவிலேயே முடிவடைந்தன. இதன் மூலம் அவர் பின்தங்கி உள்ளார். அவருக்கு இன்னும் 3 சுற்று ஆட்டங்களே மீதமுள்ளன.
இந்நிலையில் 7-வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸின் மேக்ஸிம் வாச்சியரையும், அதற்கு அடுத்த சுற்றுகளில் அமெரிக்காவின் பேபியனோ கரனாவையும், உக்ரைனின் செர்ஜி கர்ஜாக்கினையும் சந்திக்க உள்ளார்.
நார்வே செஸ் போட்டியில் இதுவரை ஒரு வெற்றி கூட பெறாத ஆனந்த், 7-வது சுற்று ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் உள்ளார். உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுடன் அவர் மோதிய ஆட்டமும் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.