செய்திகள்

பிறந்த நாள் கேக் வெட்டியதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் 

பிறந்த நாள் கேக் வெட்டியதற்காக ரசிகர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

DIN

லண்டன்: பிறந்த நாள் கேக் வெட்டியதற்காக ரசிகர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 1-ஆம் தேதி துவங்கி 3-ஆம் தேதி வரை ஹெடிங்லி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் ரமீஸ் ராசா  ஆகியயோர் வர்ணனையாளர்களாகப் பணியாற்றினார்கள்.

போட்டியின் இறுதி நாளான ஞாயிறு அன்று  முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் 52-வது பிறந்த நாள். எனவே இதனைக் கொண்டாடும் பொருட்டு வக்கார் யூனிஸ் வர்ணனையாளர்கள் பகுதியில் கேக் வெட்டி கொண்டாடினார்.

ஆனால் தற்பொழுது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில், இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றார்கள் இந்த சமயத்தில் வக்கார் யூனிஸ் பொது இடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இந்த நிகழ்வு பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிறந்த நாள் கேக் வெட்டியதற்காக ரசிகர்களிடம் வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

வாசிம் அக்ரமின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். புனிதமிக்க ரமலான் மாதத்தையும், நோன்பு கடைபிடிப்பவர்களையும் மதித்திருக்க வேண்டும். இது எங்கள் தரப்பில் தவறான நடவடிக்கை. மன்னியுங்கள்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT