விம்பிள்டனுக்கு தயாராகும் செரீனா
விம்பிள்டன் போட்டிக்கு தயாராகி வருவதாக முன்னாள் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
விம்பிள்டன் போட்டிக்கு தயாராகி வருவதாக முன்னாள் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
குழந்தைப்பேறுக்காக பல மாதங்கள் டென்னிஸ் ஆடாமல் இருந்த செரீனா, பாரிஸில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பங்கேற்றார். மூன்றாவது சுறறு வரை அபாரமாக ஆடி வெற்றி கண்ட அவர், நான்காவது சுற்று ஆட்டத்தில் பரம வைரியான மரியா ஷரபோவோவுடன் மோதுவதாக இருந்தார்.
ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்னதாக காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது டென்னிஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தசையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக விலக நேர்ந்தது. தற்போது இதற்காக தீவிர சிகிச்சை எடுத்து வருகிறேன். பல மருத்துவ நிபுணர்களை சந்தித்து மருத்துவ சிகிச்சை பெற உள்ளேன். விம்பிள்டன் போட்டிகள் தொடங்க ஒரு மாதத்துக்கு மேல் உள்ளதால், அதற்காக தயாராகி வருகிறேன்.
காயத்தில் இருந்து மீண்டு விம்பிள்டன் போட்டியில் வெல்ல முயற்சிப்பேன் என்றார் செரீனா.