முகப்பு
செய்திகள்

இங்கிலாந்து சூப்பர் லீக் டி20 போட்டியில் முதல்முதலாக விளையாடவுள்ள இந்திய வீராங்கனை!

இங்கிலாந்து கியா சூப்பர் லீக் டி20 போட்டியில் முதல்முதலாக விளையாடவுள்ள இந்திய வீராங்கனை என்கிற பெருமையை...

Updated On : 30 ஜனவரி, 2024 at 3:56 PM
பகிர்:

இங்கிலாந்து கியா சூப்பர் லீக் டி20 போட்டியில் முதல்முதலாக விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்கிற பெருமையை விரைவில் அடையவுள்ளார் மந்தனா. 

கடந்த வருடம் இந்திய வீராங்கனை ஹர்மண்ப்ரீத் கெளர், சர்ரே ஸ்டார்ஸ் அணிக்குத் தேர்வானார். ஆனால் காயம் காரணமாக அவரால் அந்தப் போட்டியில் பங்குபெறமுடியாமல் போனது. 

இந்நிலையில் கியா சூப்பர் லீக் போட்டியின் நடப்பு சாம்பியன் வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணி, மந்தனாவைத் தேர்வு செய்துள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலிய மகளிர் பிக் பாஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் இடம்பிடித்தார் மந்தனா. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் கண்காட்சிப் போட்டியில் டிரெயில்பிளேஸர்ஸ் அணிக்குத் தலைமை தாங்கினார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments