செய்திகள்

என்ன செய்தாலும் மீம் ஆக மாற்றுகிறார்கள்: விராட் கோலி வேதனை!

எழில்

சாலைகளில் குப்பை வீசுபவர்களை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது:

சாலையில் மக்கள் குப்பை வீசுவதைக் கண்டேன். அவர்களை நன்குக் கண்டித்தேன். விலை உயர்ந்த காரில் சென்றாலும் மூளை வேலை செய்வதில்லை. இவர்கள் நம் நாட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வார்களா? இதுபோல நடப்பதைக் கண்டால் நீங்களும் அவர்களைக் கண்டியுங்கள். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்றார். இதுகுறித்த விடியோவையும் பகிர்ந்தார்.

விராட் கோலியின் இந்த ட்வீட்டைக் கிண்டலடித்தும் விமரிசனம் செய்தும் சிலர் ட்வீட் செய்தார்கள். இதையடுத்து உடனடியாக அடுத்த ட்வீட்டில் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டார் கோலி. அதில் அவர் கூறியதாவது:

தைரியமாக இதுபோல செய்யத் துணிவு இல்லாதவர்கள், கிண்டலாகப் பார்க்கிறார்கள். இன்றைக்கு எல்லாமே மீம் ஆக மாற்றப்படுகிறது. அவமானம் என்று வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT