செய்திகள்

யோ யோ தேர்வில் தோல்வியடைந்த அம்பட்டி ராயுடு! இந்திய ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்?

32 வயது ராயுடு 14 புள்ளிகளை மட்டுமே எட்டியதால் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இடம்பெறமாட்டார் எனத் தெரிகிறது...

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு, அம்பட்டி ராயுடுவைத் தேர்வு செய்தது பிசிசிஐ தேர்வுக்குழு. சென்னை ஐபிஎல் அணியில் சிறப்பாக விளையாடிய அம்பட்டி ராயுடு 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றார். 

இந்நிலையில் இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணியினருக்கான உடற்தகுதித் தேர்வு பெங்களூரில் நடைபெற்றது. இதில், எதிர்பாராதவிதமாக ராயுடு தோல்வியடைந்துள்ளார். யோ யோ தேர்வில் 16.1 புள்ளிகளை எட்டவேண்டும். ஆனால் 32 வயது ராயுடு 14 புள்ளிகளை மட்டுமே எட்டியதால் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இடம்பெறமாட்டார் எனத் தெரிகிறது. ராயுடுவை இந்திய அணியிலிருந்து நீக்கி வேறொரு வீரரின் பெயரை பிசிசிஐ விரைவில் அறிவிக்கவுள்ளது. இதனால் ராயுடு ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

சமீபத்தில் முகமது ஷமி யோ யோ தேர்வில் தோல்வியடைந்ததால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நவ்தீப் சைனி அணியில் இடம்பிடித்தார். அதேபோல இந்திய ஏ அணியிலிருந்து இதே காரணத்துக்காக சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT