ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தனது அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை வெளியிட்டது. 9 தலைசிறந்த அணிகள் பங்கேற்கும் இந்த முதல் தொடர் 2019 ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி 2021 ஏப்ரல் 30-ஆம் தேதி முடிவடைகிறது.
அதுபோல அனைத்து அணிகளின் போட்டித் தொடர்களின் விவரங்களையும் இதனுடன் ஐசிசி வெளியிட்டது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெறும் புகழ்பெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் 2020-21 இல் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2020-ல் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடவுள்ளது. சர்வதேச அரங்கில் 12-ஆவது டெஸ்ட் அணியாக தகுதி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது.
பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் இந்தப் போட்டி இரண்டே நாட்களில் முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.